புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது இரட்டை குடியுரிமை விதி குறித்த கவலைகள் தீர்க்கப்படும்.ஜனாதிபதி

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது 20 வது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விதி குறித்த கவலைகள் தீர்க்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று ஜனாதிபதியை சந்தித்து இரட்டை குடியுரிமை விதி குறித்து கவலைகளை எழுப்பியபோது ஜனாதிபதி இந்த உறுதிமொழியைக் கொடுத்தார் என்று லங்கா சம சமாஜா கட்சியின்) தலைவர் திஸ்ஸா விதானா தெரிவித்தார்.

அவரும் அரசாங்கத்தில் உள்ள பல எம்.பி.க்களும்  இரட்டைகுடியுரிமை விதிக்கு எதிரானவர்கள் என்று விதானா கூறினார்.

இருப்பினும், ஜனாதிபதியின் உறுதிமொழியை அவர்கள் ஏற்றுக்கொண்டதாக  நம்பப்படுகின்றது.