20 வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு எளிதாக கிடைக்கும். பசில் நம்பிக்கை

இன்று (22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தமக்குஉள்ளது என்று திரைக்குப் பின்னால் திட்டமிடும் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை கொண்டுள்ளார்.

நேற்று இரவுபசில் ராஜபக்ஷ ஒரு பொருளாதார நிபுணரின் இல்லத்தில் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

20 வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இன்று மாலை பாராளுமன்றத்தில் எளிதில் பெறப்படும் என்று பசில் ராஜபக்ஷ கூறியுள்ளதாக அறியப்படுகிறது