செங்கலடியில் பொதுமக்களுக்கான முகக்கவசம் மற்றும் தொற்றுநீக்கி வழங்கும் செயல்பாடு ஆரம்பம்.

மட்டக்களப்பு   

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில்  பொதுமக்களுக்கான   முகக்கவசம் மற்றும் தொற்றுநீக்கி வழங்கும் செயல்பாடு இன்று  மட்டக்களப்பு செங்கலடியில்  முன்னெடுக்கப்பட்டது

நாட்டில்  கொரோனா வைரஸ்  தொற்று  பரம்பல் அதிகரித்துள்ள நிலையில் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில்  தனியார் தொண்டு நிறுவனங்களின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டலை வழங்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைக்கு அமைவாக   மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வுகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன  .

அந்தவகையில் மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் ஏறாவூர் செங்கலடி பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட    பிரதேசத்தில் பொதுமக்களுக்கான   முகக்கவசம் மற்றும் தொற்றுநீக்கி வழங்கும்  நிகழ்வு இன்று நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் மாவட்ட பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில்  செங்கலடி பொதுசுகாதார  வைத்திய அதிகாரி அலுவலகம்  ஏறாவூர் பொலிஸ்   செங்கலடி பிரதேச சபை ஆகியன இணைந்து  இந்த  நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது

இந்நிகழ்வில் ஏறாவூர் செங்கலடி பொதுசுகாதார  வைத்திய அதிகாரி வைத்தியர்  .ஸ்ரீநாத் இ ஏறாவூர் பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி  இபி .டப்ளியு .கே . ஜயந்த இ  செங்கலடி பிரதேச சபை தவிசாளர் நாகமணி கதிர்வேல் . மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்  வி .விஜயகுமார்   பொது சுகாதார பரிசோதகர் எஸ் . தேவேந்திரராஜா  மற்றும் அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள்  பொலிஸ்  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்