ஆதி அம்பலாமா பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான ஆசிரியை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்விகற்பித்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்ட பின்னர், பாடசாலைமாணவர்களுக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.
பொது சுகாதார பரிசோதகர் சுரேஷ்குமார் கூறுகையில், அவர் எவ்வாறு வைரஸ் பாதிப்புக்கு ஆளானார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையெனவும்.
அவருடன் தொடர்புடைய ஒரு குழுவை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது, எனவும் தெரிவித்தார்.