மூன்று வைத்தியர்களுக்கும் கொரனா தொற்று.

இலங்கையில் கோவிட் 19 கொரனா நோய் தாக்கத்துக்குள்ளானவரில்  மூன்று  வைத்தியர்களும் அடங்குவதாக  தெரிவிக்கப்படுகின்றது.

மாவனல்லா பகுதியில் உள்ள இரண்டு  வைத்தியர்கள் மற்றும் கேகாலை பகுதியில் உள்ள ஒரு  வைத்தியரும் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மினுவாங்கொட பிரதேசத்தில் தொற்றுக்குள்ளான நோயாளிகளுடன் நெருங்கிப்பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், எலவப்பிட்டியில் உள்ள  ஒரு விகாரையில் பணிபுரியும் நான்கு துறவிகளும் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.