தாதியின் மகளுக்கு கொரனா பாணந்துறை ஆதார  வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைபிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாணந்துறை ஆதார  வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்  பணியாற்றும்  தாதி உத்தியோகத்தரின் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து, நேற்றிரவு (09) முதல் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் உட்பட சுமார் 10 ஊழியர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக  வைத்தியசாலைப்பணிப்பாளர்  டாக்டர் இந்திராணி கோதகண்ட தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பீ.சீ.ஆர் பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.