சட்டத்தரணி மங்களேஸ்வரியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பின்தங்கிய கிராமங்களுக்கு குடிநீர் வசதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பின்தங்கிய கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கரின் ஏற்பாட்டில் மயிலந்தனை, சில்லிக்கொடியாறு ஆகியகிராமங்களுக்கே இவ்வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்காலங்களில் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இப்பகுதிகளுக்கு சென்ற மங்களா சங்கர் இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும்  குடிநீர்ப்பிரச்சினையை கருத்தில்கொண்டே புலம்பெயர்ந்தவர்களின் உதவியுடன் குழாய்க்கிணறுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.