வைத்தியசாலையிலிருந்து தப்பிய கொரனா நோயாளி.

கொரோனா வைரஸ் தொற்றுகாரணமாக ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளார். இவர் பெலியகோடாவில் வசிப்பவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரகாம மருத்துவமனையின் தகவலின்படி, பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் கோவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானதை உறுதி செய்த பின்னர் அந்த நபர் நேற்று பிற்பகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நோயாளி நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாகவும், பாதிக்கப்பட்ட நபரைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் ராகம மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்