ஒருமாதகாலமாக அடையாளம் காணப்படாத நிலையில் வயோதிபரின் சடலம்

காரைதீவு  நிருபர் சகா)

ஒருமாதகாலம் அடையாளம் காணப்படாத நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் உள்ளது.
குறித்த வயோதிபர் கடந்த மாதம் காரைதீவு பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி குறித்த நபர் கடந்த மாதம் 01.09.2020 அன்று உயிரிழந்துள்ளார் .
ஆனால் உயிரிழந்தவரின் உடல் அடையாளம் காணப்படாதநிலையில் ஒரு மாதகாலமாக மட்டக்களப்பு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை அறிந்தவர்கள் அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ளுமாறு சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு -0775292016