இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவா்களில் ஒருவராக எம்.ஐ.எம். அப்துல் மனாப்

எஸ்.அஷ்ரப்கான்)
 
இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவா்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் பொதுச் செயலாளரும், சனி மௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், கல்முனை மாநகர சபையின் உறுப்பினருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் அவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு  நேற்று  மாலை (04) கல்முனை அல் பஹ்ரியா மாகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 
அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின்  தலைவர் வை.கே. ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு  இலங்கை உதைப்பந்தாட்ட சம் மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு,  இலங்கை உதைப்பந்தாட்ட
சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜெஸ்வர் உமர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மேலும் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட   சங்கத்தின்  சிரேஷ்ட உப தலைவரும் ஆசிரியருமான அலியார் பைஸர்,  பிரதித் தலைவர்  எம்.எல்.றபீக்,  சங்கத்தின்  உப  பொதுச் செயலாளரும்  கல்முனை பிற்லியன்ட் விளையாட்டுக்கழகத்தின்  பொதுச் செயலாளருமான
எஸ்.ரீ.எம்.பஸ்வாக், சங்க பொருளாளர் எஸ்.முஹம்மட்கான் மற்றும்
அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட  சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்கள் , அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட  சங்கத்தில் அங்கம் வகிக்கும்  கழகங் களின் அங்கத்தவர்கள்,  நடுவர்
சங்க உறுப்பினர்கள் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி  வாழ்த்துப் பா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் இலங்கை உதைப்பத்தாட்ட சங்கத்தின் உப தலைவா்களில் ஒருவராக   முதன்  முறையாக  ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.