மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில்பீ.சீ.ஆர் பரிசோதனை இற்றைவரை480 பேருக்கு  கொரனா தொற்று

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில்  இவ்வருடம் ஏப்ரல் 25ம் திகதிமுதல் இற்றைவரை 10071பேருக்கு கொரனா பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் 480 பேருக்கு  கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை  ஆய்வுகூட தொழில்நுட்பபிரிவினர் தெரிவித்தனர்..

 மட்டு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரின் வழிகாட்டலில் நுண்ணுரியல் விசேட வைத்தியநிபுணரும் கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளருமாகிய திருமதி வைதேகி ரஜிவன் பிரான்சிஸ் அவர்களின் ஆலோசனை, மேற்பார்வையின் கீழ் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒலுவில், புணானை, காத்தான்குடி போன்ற தனிமைப்படுத்த நிலையங்களிலும் மட்டுபோதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களிடமிருந்தே  இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் மட்டுமே இப்பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.