(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தேசிய தொனிப்பொருளுக்கமைய, பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், சிறுவர்களினால் குறுநாடகம், பாடல், கவிதை போன்ற நிகழ்ச்சிகளும் ஆற்றுகை செய்யப்பட்டன. மேலும், போதைப்பொருளினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தான சித்திரங்களும், நஞ்சற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டியதுபற்றியதான விழிப்புணர்வு பதாதைகளும், இயற்கை முறையிலான விவசாய ஊக்குவிப்பு தொடர்பிலான சித்திரங்களும் மாணவர்களினால் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.