கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை எதிர்வரும் 12ம் திகதியிலிருந்து அடுத்த மாதம் 6ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 2 ஆயிரத்து 648 நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பாடசாலைப் பரீட்சார்த்திகளும்இ 85 ஆயிரத்து 244 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ளது. 2,936 நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் தோற்றவுள்ளனர்.