(படுவான் பாலகன்)மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.
அபயம் அமைப்பினரும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமும் இணைந்து நடாத்தும் இச்செயலர்வின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம்;, உதவிக்கல்விப் பணிப்பாளர் சு.மாணிக்கப்போடி, ஆசிரிய ஆலோசகர் பே.குமாரலிங்கம், ஓய்வு நிலை அதிபர் பொ.நேசதுரை அபயத்தின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
120க்கு மேற்பட்ட மாணவர்கள் இச்செயலமர்வில் கலந்துகொண்டிருந்தனர். வளவாளர்களாக ரிசிகரன், வரதராசா ஆகியோர் செயற்பட்டதுடன், இதற்கான ஏற்பாடுகளை தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் கோகுலன், ஓய்வுநிலை அதிபர் பொ.நேசதுரை ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த அபயம் அமைப்பின் அனுசரணையில், யாழ்ப்பாணம் பலாலி, புத்தூர் போன்ற இடங்களிலும், மட்டக்களப்பின் வாகரை பகுதியில் பால்ச்சேனையில் ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.