மண்முனை வீதியை விட்டு நீருக்குள் பாய்ந்த வாகனம்

கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட மண்முனை பிரதான வீதியில் பயணம் செய்த வாகனம் ஒன்று வீதியை விட்டு நீருக்குள் பாய்ந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து மண்முனை நோக்கி சென்ற வாகனம்(பிக்கப்) வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் இருந்த தூணையும் உடைத்து நீரோடும் வாய்காலுக்குள் பாய்ந்துள்ளது.

இவ்வாகனத்தில் நான்கு பேர் பயணம் செய்திருந்த நிலையிலும், எவ்வித விபத்துக்களுக்கும் இடம்பெறாது அதிஸ்டவசமாக தப்பியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.