பனங்காடு ஸ்ரீ நாககாளியம்மன் ஆலய தீமிதிப்பு நாளை

வி.சுகிர்தகுமார்

  வரலாற்றுச்சிறப்புமிக்க அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ நாககாளியம்மன்; ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு பெருவிழாவின் தீமிதிப்பு நாளை(01) காலை இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டதான சங்காபிசேகமும் பாற்குடபவனியும்  நேற்று நடைபெற்றதுடன் இன்று (30) அம்மன் நகர்வலம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

பனங்காடு கேணிக்கரைப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாற்குடபவனி பிரதான வீதிகளினூடாக பனங்காடு பாசுபதேசுவரர்; ஆலயத்தை சென்றடைந்து அங்கிருந்து ஸ்ரீP நாககாளியம்மன்; ஆலயத்தை அடைந்தது. இதே நேரம் இன்று குறித்த வீதிகளினூடாக அம்மன் நகர்வலம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

கடந்த 21ஆம் திகதி  கணபதி ஹோமம் மற்றும் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான திருச்சடங்கானது 29ஆம் திகதி இன்று இடம்பெற்ற பாற்குடபவனி மற்றும்; அம்மனின் ஊர்வலத்துடனும்;;; சக்தி மகா யாகம் நோர்ப்பு நெல் நேர்தல் ஆகிய கிரியைகளுடனும் 01ஆம் திகதி காலை இடம்பெறும் பக்தி ததும்பும் தீமிதிப்பு மற்றும் தீர்த்தோற்சவம் 08ஆம் திகதி இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் நிறைவுறும்.

ஆலய தலைவர் க.கந்தையாபிள்ளை தலைமையில்; இடம்பெற்ற பாற்குடபவனியில் அம்மன் நகர்வலத்திலும் பெருந்திராளான அம்மன் அடியவர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்தியை நிறைவு செய்தனர்.

பின்னர் ஆலயத்தில் இடம்பெற்ற அ;ம்மனுக்கான பாலாபிசேத்திலும் விசேட பூஜையிலும் கலந்து கொண்ட பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஆலய வழிபாட்டு பிரதான கிரியைகள்  யாவற்றையும் ஆலய பிரதமகுரு சிவசக்தி உபாசகர் சிவஸ்ரீ வி நடராஜா ஆரம்பித்து வைத்ததுடன் ஆலய உற்சவகால பிரதமகுரு சிவஸ்ரீ ந.சதீஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ கஜமுகசர்மா மற்றும் சிவஸ்ரீ த.குகனேஸ்வரசர்மா உள்ளிட்ட குருமார்களால் நடாத்தி வைக்கப்பட்டது.

சங்காபிசேக கிரியைகளில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசனும் கலந்து கொண்டார்.