ஸூபா ஏ. றஊப் எழுதிய ” சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்” நூல் வெளியீட்டு விழா

(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க செயற்குழு உறுப்பினரும், ஆசிரியையுமான ஸூபா ஏ. றஊப் எழுதிய ” சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்” நூல் வெளியீட்டு விழா, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (03.09.2020) மாலை 3.30மணிக்கு மருதமுனை கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ அல்-ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
வரவேற்பு மற்றும் அறிமுக உரையை இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க பொருளாளர் எச்.எம்.எம்.மன்சூர் அவர்களும், தலைமையுரை மற்றும் நூல்  நயமும் இலக்கிய விமர்சகர் ஆசிரியர் ஜெஸ்மி எம் மூஸா அவர்களும், நூல் பற்றிய ஆய்வினை இலக்கிய விமர்சகர் எம்.அப்துல் றஸாக் அவர்களும், நூலின் ஏற்புரையை நூலாசிரியர் ஆசிரியை ஸூபா ஏ. றஊப் அவர்களும் நிகழ்த்தவுள்ளார்கள்.
நூலின் முதற் பிரதியை நூலாசிரியரின் பெற்றோருக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.