அம்பாறை மல்வத்தை நூலகத்தின் அவல நிலை.

நூலகம். என்பது அறிவை வளர்க்குமிடம். மாணவர்தொடக்கம் இளைஞர்கள் இபெரியவர்கள் வரை தினந்தோறும் அவர்களின்அறிவுப்பசிக்கு அறிவை வழங்குமிடமும் பொழுதுபோக்குமிடமாகும்.தினசரி பத்திரிக்கைகள் மாணவர்கள் பயன்படுத்தும் நூல்கள் பயிற்சிநூல்கள் நாவல்கள் போன்ற பல அறிவை வளர்க்கும் இருந்தால் தான் அது பூரணமான நூலகமாகும் ஆனான் பல ஒரு பின் தங்கிய பிரதேசத்தில் அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம் .

நான் இப்பொழுது சொல்லப்போவது கவனிப்பார் இன்றி காணப்படும் நூலகம் பற்றியது. அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற மல்வத்தை நூலகத்தைப்பற்றி கூறப்போகின்றேன் இம்மல்வத்தை கிராமத்தில் வசிக்கும். பெரும்பாலானவ மக்கள் விவசாயத்தையும் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள் தினக்கூலி வேலை. செய்து வாழ்பவர்கள் அவர்களின் பிள்ளைகள் தமது பாடசாலை நேரத்தை தவிர தமது சுய கற்றலுக்காக உள்ள ஒரேஇடம் அந்த இடத்தின் நிலை சொல்லும்தரமன்று.

1990களுக்கு முன் இந்த நூலகமானது மல்வத்தை கிராமசபையின் கீழ் இயங்கிய இந்த நூலகமானது இம்மல்வத்தை கிராமத்தை அண்மிய மல்லிகைத்தீவு புதுநகரம் கணபதிபுரம் போன்ற கிராம மக்களும் அந்த காலத்தில்பயன் பட்டிருந்த போதும்1990களில்நாட்டில் ஏற்பட்ட வன்முறையானால் இந்த. நூலகமும் சூறையாடப்பட்டு இங்கு இருந்தநூற்றுக்கணக்கான நூல்களும் மற்றும் கட்டிடம் தளபாடங்களும் தீயிட்டு கொழுத்தப்பட்டு அழிக்கப்பட்டது இடம்பெயர்ந்து இக்கிராம மக்கள் காரைதீவு தம்பிலுவில் திருக்கோவில் பகுதிகளில் அகதிமுகாங்களில் வாழ்ந்த மக்களை 1994 பிற்பகுதியில் அடிப்படை வசதிகள் பல பூர்த்தி செய்யப்படாமல்மிக அவசரமாக குடியமர்த்தப்டட போது இந்த நூலகம் அப்போது வெறுமனே நூலகத்துக்கு பொருத்தமற்ற கட்டிடமொன்று கட்டப்பட்டதேதவிர ப்பொருத்தமாஅமைக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்அத்துடன் போதிய நூல்கள்இபுத்தகங்கள் வழங்கப்படவில்லை என்பதே மிகவும் பரிதாபத்துக்குரியவிடயமாகும்.

அத்துடன் நிரந்தர நூலகர் நியமனம் செய்யப்படாமல் ஒரு தற்காலிக சிற்றூழியரை பயன்படுத்தி நடாத்தி வருகின்றது.அது மட்டுமல்ல வருடாந்தம் பிரதேச சபையினால் நூல்கள். கொள்வனவுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வாங்கப்பட்ட போதுமானதாகவும் இல்லை அவ்வாறு வழங்கப்பட்ட நூல்கள் மாணவர்களுக்கும் ஏனைய வாசகர்களுக்கும் பொருத்தமற்றதாக காணப்படுகிறது.தற்போதுஇக்கிராமத்தில் உயர்கல்விகற்கும் மாணவர்கள் அதிகமாகவும் படித்து ஆசிரியப்பணி அரச உத்தியோகத்தர்களாக பணிபுரிகின்றனர் இவர்களின் ஓய்வு நேரத்தை கழிக்கும்இடமானது எந்த விதமான முக்கிய அவசியமான நூல்கள் புத்கங்களின்றி தளங்கள் அற்ற சில புத்தகங்களுடன் உள்ள கட்டிடமாகவே காணப்படுவதுவேதனை அளிக்ககின்றது. அத்துடன் இந்த நூலகத்துக்கு கடந்த சில. வருடங்களாக எந்த நூல்களும் வந்து சேர்ந்தேஇல்லை என்றே கூறப்படுகிறது இந்த நூலகம் இயங்குவதற்கு தேவையான போதிய தளபாடங்களும் இல்லை அம்பாறை மாவட்டத்தில் காணப்படும்நூலகங்களோடு பார்த்தால் மிகவும் பரிதாபத்துக்குரிய நூலகமாகவே காணப்படுகிறது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து இந்த நூலகம் இயங்குவதற்கு தேவையான. பொருத்தமானநூல்கள் தளபாட வசதிகள் ஆளணி வசதிகள் என்பவற்றை ஏற்படுத்திதர வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்

ரவி கிருஷ்ணபிள்ளை