மட்டக்களப்பில் நடைபெற்ற பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி கிராம சேவையாளர் பிரிவில் இயங்கி வரும் பவர் ஹிட் இ ரெயின் போ இ ஏ ஆர் சி ஆகிய கழகங்கள் ஒன்றிணைத்த கிராம விளையாட்டு கழகங்களினால் நடாத்தப்பட்ட பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பில் நடைபெற்றது

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் தொற்றின் காணமாக கிராமத்துக்குள் முடக்கி போயுள்ள இளைஞர்களின் மனநிலையினை மாற்றி கிராம இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும் இ கிராம இளைஞர்கள் ஊடாக சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமிர்தகழி கிராம சேவையாளர் பிரிவில் இயங்கி வரும் விளையாட்டுக்கு கழகங்களை ஒன்றிணைத்து கிராம சிரேஷ்ட கழக உறுப்பினர்களின் பங்களிப்புடன் சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது

அந்த வகையில் அமிர்தகழி கிராம சேவையாளர் பிரிவில் இயங்கி வரும் பவர்ஹிட் இ ரெயின்போ இ ஏ ஆர் சி ஆகிய கழகங்கள் ஒன்றிணைந்த கிராமத்தில் உள்ள விளையாட்டு கழகங்களினால் நடாத்தப்பட்ட பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கழகங்களின் தலைவர்கள் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்றது

அணிக்கு 11பேர் கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட சிநேகபூர்வ பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய கழகங்களில் வெற்றிபெற்று நான்காம் இடத்தினை அவஞ்செஸ் கழகமும் இ மூன்றாம் இடத்தினை டைடன்ஸ் கழகமும் இ இரண்டாம் இடத்தினை பிளாஸ்ட்ஸ் கழகமும் இ முதலாம் இடத்தினை ஹிட்டெஸ் கழகமும் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணங்களை சுவீகரித்துக்கொண்டன .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரணவனபவன் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட கழகங்களின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர் நிகழ்வில் கழகங்களின் சிரேஷ்ட உறுப்பினர்களை கௌரவித்து நினைவு பரிசில்களும் கழக உறுப்பினர்களினால் வாங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது