இலங்கை கடற்பரப்பிற்கள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யும் வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு பிரதமர் இலங்கை கடற்பரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்

0
109

வாஸ் கூஞ்ஞ) 26.09.2020

இந்திய மீனவர்கள் இழுவை படகுகளின் மூலம் அத்துமீறி சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொளி மூலமான கலந்துரையாடலில் 26.09.2020 அன்று மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் அத்துமீறி சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்கள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யும் வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு பிரதமர் இலங்கை கடற்பரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்

25.09.2020 அன்று வெள்ளிக் கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்த வட மாகாண மீனவ சங்கங்களுடனான விஷேட கலந்துரையாடலின்போதே பிரதமர் ராஐபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 தொற்று இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் இந்திய இலுவைப் படகுகளை கைது செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளமையால் இலங்கை கடற்ப்பரப்பிற்குள் இந்திய இழுவைப் படகுகளின் வருகையும் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதாக மேற்படி சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலமை காரணமாக மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தமது மீன்பிடி தொழிலை முன்னெடுத்து செல்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளதாகவும் வட மாகாண மீனவ சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இவ் சந்திப்பில் கலந்து  கொண்டவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் சட்டவிரோதமாக இலங்கையின் கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாரத பிரமருக்கு 26.09.2020 அன்று  எடுத்துரைப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துமீறி சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்கள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யும் வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு பிரதமர் இலங்கை கடற்பரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்

இதேவேளை கிளிநொச்சி இரணைமடு குளத்தை அண்மித்த பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டத்தை நடைபடுத்துமாறும் இதன்போது பிரதமர் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இவ் குறித்த சந்திப்பில் கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு கடற்தொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி பலநாள் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஐhங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் அங்;கஜன் இராமநாதன், பிரதமரின் செயலாளர் காமினி செனரத்

கடற்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.எம்.ஜ.ரத்நாயக்க அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு கடற்தொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி பலநாள் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி செயலாளர் ஜயந்த சந்திரசோம கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அருணி சி டீ விக்கிரமரத்ன கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.Nஐ.கஹவத்த வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் ரன்சிறி பெரேரா வடக்கு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.