முனைக்காடு கிராமத்தில் இளைஞன் திடீர் மரணம்

(சுடர்) கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் தீடிரென இளைஞர் ஒருவர் மரணமான சம்பவம் நேற்று(23) இரவு இடம்பெற்றுள்ளது.

மரணமடைந்தவர் முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த இரத்தினசிங்கம் உதயன் என இனங்காணப்பட்டுள்ளது. இவர் 35வயதினையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்று இரவு வீதியால் பயணித்து, உறவினர் வளவொன்றினுள் உள்நுழைந்துள்ளார். உள்நுழைந்த இவர், அவ்விடத்திலேயே விழுந்த நிலையிலேயே தீடிரென மரணமடைந்துள்ளார்.

இம்மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் கொக்கட்டிச்சோலை காவல் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.