வருடாந்தம் எழுபதாயிரம் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமை.

0
103

மன்னார் சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டுல்ல வீரசிங்க

வாஸ் கூஞ்ஞ) 

எருக்கலம்பிட்டி கிராமத்தில் போதை வஸ்துக்களை ஒழிப்பதிலும் இதற்கு அடிமையாகியிருப்போருக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை நல்லதொரு பிரiஐகளாக மாற்றி அமைப்பதற்காக இவ் கிராம மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதுபோல் ஒவ்வொரு கிராம மக்களும் இவ்வாறான செயல்பாடடில் ஈடுபட வேண்டும் என மன்னார் சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டுல்ல வீரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி சீரழிவோரை நல்வழிக்கு கொண்டு வரும் நோக்குடனும் எருக்கலம்பிட்டி சமூக சீர்திருத்த அமைப்பின் ஏற்பாட்டில் போதையற்ற புதிய கிராமத்தை உருவாக்குவோம் என்ற நோக்கில் எருக்கலம்பிட்டி புனர்வாழ்வு நிலையம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (20.09.2020) எருக்கலம்பிட்டி கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இதில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டுல்ல வீரசிங்க இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இன்று எனது வாழ்வில் ஒரு முக்கிய நாளாக நான் கருதுகின்றேன். காரணம் இவ் கிராம மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அணைவரும் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல காரியத்தை முன்னெடுக்கின்றீர்கள்.

தற்பொழுது அதிகமானோர் அரசாங்கம் செய்யும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் எமது ஊருக்கு நாமே செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் நல்லதொரு முயற்சியை நீங்கள் மேற்கொண்டுள்ளீர்கள்.

நான் மன்னார் மாவட்டத்துக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றபொழுது எனக்கு முதலில் எருக்கலம்பிட்டி போதைப் பொருட்கள் பாவனை, குடும்ப பிரச்சனைகள், சமூக சீர்கேடு கொண்ட ஒரு கிராமமாகவே தென்பட்டது.

ஆனால் தற்பொழுது நல்லதொரு கிராமமாக எருக்கலம்பிட்டி திகழ்வதை என்னால் சொல்ல முடியும். அத்துடன் போதை வஸ்து அற்ற ஒரு கிராமமாக இவ் கிராமம் திகழ்வதாக அறிகின்றேன்.

இங்குள்ள பள்ளி நிர்வாகம் போதை வஸ்து புனரத்தான நிலையம் ஆரம்பிப்பது தொடர்பாக என்னை பல தடவைகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
எமது பொலிஸ் பிரிவும் சமூக சீர்திருத்த அமைப்புக்கு ஒத்துழைப்புக்ள் வழங்கி வருகின்றது. இங்கு அனைத்து அமைப்புக்களும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருவதையிட்டு நான் அவர்களுக்கு நன்றியையும் வழங்கி நிற்கின்றேன்.

இங்குள்ள பள்ளி நிர்வாகம் தங்களின் இவ் செயல் திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு எருக்கலம்பிட்டிக்கு ஒரு நேர்மையான பொலிஸ் அதிகாரியை நியமிக்கும்படி என்னிடம் கேட்டிருந்தனர். அவர்கள் விருப்பப்படி மன்னார் மாவட்டத்தில் போதை தடுப்பு பிரிவில் மிகவும் நேர்மையுடன் செயல்பட்ட பொலிஸ் அதிகாரியான  எஸ்.ஐ. விக்கிரமரத்தின என்ற பொலிஸ் அதிகாரியை இங்கு பொறுப்பதிகாரியாக நியமித்திருந்தேன். இதன் பிரதி பலனை நான் இன்று பார்க்கின்றேன்.

இன்று இந்த நாட்டில் எல்லா இடங்களிலும் போதை பொருள் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றது. இதனால் சமூதாய சீர்கேடுகள் நிலவி வருவதை நாங்கள் அவதானித்து வருகின்றோம்.

கடந்த ஐந்து வருடங்களை பின்னோக்கிப் பார்க்கின்றபோது வருடாந்தம் குறைந்தது எழுபதாயிரம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வரும் நபர்களை பொலிசார் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

இன்று இந்த போதைப் பொருள் பாவனை அதிகமான இளைஞர்களை தாக்கி வருகின்றது. நாங்கள் அவதானிக்கின்றபோது இந்த போதை பொருள் விற்பனையாளர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்ட சரித்திரம் இல்லை.

இந்த புதிய அரசாங்கத்தின் முக்கிய செயல் திட்டமாக போதைப் பொருட்களை தடைசெய்வதாகும். இதற்கு அனைத்து படைகளும் இவ் செயல் திட்டத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

அத்துடன் இந்த கிராம மக்களும் ஒன்றினைந்தவர்களாக இவ் செயல் திட்டத்தில் இறங்கியிருப்பது உண்மையில் பெருமைக்குறிய விடயமாகும். இதற்கு எங்கள் ஒத்துழைப்பு கட்டாயம் இருக்கும்.

இங்கு அவதானிக்கும்போது இவ் கிராம மக்கள் மட்டுமல்ல அயல் பகுதி மக்களும் இதில் கலந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே இவர்களும் இவ்வாறான செயல் திட்டங்களை தங்கள் கிராமங்களில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புகின்றேன்.

இவ் செயல் திட்டத்தை சட்டபூர்வமான முறையில் முன்னெடுத்துச் செல்ல இவ் சந்தர்ப்பம் எமக்கு அமைந்துள்ளது. அதாவது மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானும் இதில் கலந்து கொண்டு இருப்பதே ஆகும்.

பொலிசாரை பொறுத்தமட்டில் நேர்மையாக உண்மையாக செயல்படுகின்ற பொலிசார் பலர் இருக்கின்றார்கள். அNதுவேளையில் நேர்மையற்ற சிலரும் இருக்கின்றார்கள். மன்னாரைப் பொறுத்தமட்டில் சிறந்த நேர்மையுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள்.

ஆகவே பொது மக்களாகிய நீங்களும் எங்களுடன் இணைந்து இவ்வாறான செயல் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்போது நாங்களும் சமூதாய சீர்திருத்த விடயத்தில் தீவிரமாக செயல்படக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு எங்கள் ஒத்துழைப்பு எப்பொழுதும் இருக்கும்.

உங்கள் இந்த செயல்பாடு தொடர்ந்து நிலை கொண்டிருக்க நான் வாழ்த்தி நிற்பதுடன் சமூக சீர்கேடுகள் நிலவும்போது பொலிசாருக்கு தெரிவிக்கும்போது எமது ஒத்துழைப்பு கிடைக்கப் பெறும் என தெரிவித்து நிற்கின்றேன் என்றார்.