மட்டக்களப்பில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கு புதியவர்களை இணைக்கும் நிகழ்வு.

0
112
?

(படுவான் பாலகன்) பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கு புதிய ஆசிரிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வைபவம் இன்று(20) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது.

தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்படுகின்ற இக்கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் இணைப்பாளரும், அட்டளாச்சேனை கல்வியற்கல்லூரியின் பீடாதிபதியுமான கே.புண்ணியமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு தேசியற்கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர், விரிவுரையாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இக்கற்கை நெறி ஆரம்பிக்கவிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையினால் இடைநிறுத்தப்பட்டு, இன்றைய தினம் பதிவு நடவடிக்கைகளும், வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இக்கற்கைநெறியினை பயில்வதற்காக ஆசிரிய சேவையில் உள்ள 200க்கும் மேற்பட்டோர் பதிவுகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

?
?
?
?
?