தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு வரும் மட்/ கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

0
153

மட்/கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

வெளிநாட்டில் வசிக்கின்ற ஒரு மனித நேயம்கொண்ட சிறுமியின் பிறந்ததினத்தை முன்னிட்டு உண்டியல் சேர்ப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை மறத்தமிழர் உதவித்திட்டம் ஊடாக துவிச்சக்கர வண்டிகளாக. மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்திற்கு தொலை தூரத்தில் இருந்து கல்வி கற்க வரும் இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவனுக்கு மறத்தமிழர் உதவித்திட்டம் ஊடாக மூன்று துவிச்சக்கர வண்டிகள் 18 ம் திகதி அன்று வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மறத்தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.