திருக்குறள் பொது மறை. இதை கற்று வாழ்வியலாக்க வேண்டும். அரச அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்

வாஸ் கூஞ்ஞ
திருக்குறளை எவரும் மத ரீதியாகவோ அல்லது படிப்பதற்கு இது ஒரு பாடமாக நினைக்கக் கூடாது. திருக்குறலை கற்று நாம் வாழ்வியலாக யெல்பட வேண்டும்;. திருக்குறலை உலகமே மதிப்பளிக்கின்றது ஆனால் நாம் அவ்வாறு இருக்கின்றோமா என்பதை சிந்திக்க வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் திருவள்ளுவர் விழா மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் வியாழக்கிழமை (17.09.2020) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தொடர்ந்து தெரிவிக்கையில்

திருவள்ளுவர் ஒரு பிற்படுத்தப்பட்ட ஒரு பகுதியைச் சேர்ந்தவர். ஆவர் ஒரு ஒளவையாரின் தம்பியார். ஒளவையாரே தனது நிலையைப் பெறுவதற்கு மிகவும் கடினமாக உழைத்தவர். அவர் மறைந்த பின்பே ஒளவையாரின் புகழ் ஓங்கியது.

இவ்வாறுதான் திருவள்ளுவரும் மிகவும் கடினமாக உழைத்தவர். அதாவது அவர் உலக பொது மறையை கொண்டுவந்தவர். திருவள்ளுவர் எழுதிய மறையை இன்று உலகம் முழுதும் மதித்து வாழ்கின்றது.

ஆனால் எமது நாட்டில் மக்கள் இதை பெரிதாக நினைப்பதில்லை. நான் இந்த நேரத்தில் முன்னாள் வடமாகாண ஆளுநருக்கு நன்றி கூற வேண்டும் இவ் விழாவை வருடந்தோறும் கொண்டாட ஆரம்பித்து வைத்தமைக்கு. நாம் இதைத் தொடர்ந்து கொண்டாட வேண்டும்.

இது எமக்கு மட்டுமல்ல உலக பொது மறையாக இருக்கின்றது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  அறத்தைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது.

நாம் அறத்தை பின்பற்றுகின்றோமா என்பது வேறு. இது சொல்லபடுவதைவிட நாம் இதன் மெய்பொருளை ஆராய்வது மேல். இது எமது வாழ்க்கைக்கு ஒத்துப் போகின்றதா? இது ஒத்துப் போகாதன் காரணம் என்ன? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

திருவள்ளுவர் அன்று ஒன்றுமில்லாத நேரத்தில் தூர நோக்குடன் எழுதியிருக்கின்றார். இது ஆயிரமாயிரம் வருடங்களுக்கு அழியாச் சொத்தாக இருக்கின்றது.

திருக்குறலை எவரும் மத ரீதியாகவோ அல்லது படிப்பதற்கு இது ஒரு பாடம் என்று நாம் கற்கக் கூடாது. இதை நாம் வாழ்வியலாக பார்க்க வேண்டும் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாளாந்தம் நாம் குறைந்தது ஐந்து குறலை படித்தாலே மனதுக்கு நிம்மதி தரக்கூடியது. இன்று நாம் உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம் பல வாக்குறுதிகளை கொடுக்கின்றோம் பின் அவ்விடயத்தில் ஏமாற்றுகின்றோம்.

ஆகவே நாம் திருக்குறலைக் கற்றுக் கொண்டு நல்லவற்றை தெரிந்தெடுத்து எமது வாழ்வாக மாற்றிக் கொள்வோம் என்றார்.