அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (16) காலை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த குழு தயாரித்த அறிக்கை நேற்று (15) பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கல்வி அமைச்சர்  பேராசிரியர்.ஜி. எல். பீரிஸ் இக்குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.

20 வது திருத்தம் குறித்த ஆய்வில் அடையாளம் காணப்பட்ட புதிய  விடயங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்கள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்