அறிக்கை பிரதமரிடம்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு இன்று (15)  பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் அறிக்கையை வழங்கியது.

அமைச்சரவை அமைச்சர்கள்,  இராஜாங்கஅமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சம்பந்தப்பட்ட குழுவுக்கு அமைச்சரவை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமை தாங்கினார்.

20 வது திருத்தம் குறித்த ஆய்வில் அடையாளம் காணப்பட்ட புதிய சேர்த்தல்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து பிரதமர் சம்பந்தப்பட்ட குழுக்களின் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை ஆய்வு செய்ய இந்த குழு சமீபத்தில் பிரதமரால் நியமிக்கப்பட்டது.

இருப்பினும், குழு அறிக்கை இன்று பிரதமரிடம் ஒப்படைக்கப்படாது என நாம்  இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தோம்..