பட்டப்பகலில் கழுத்தில் கண்ட துண்டமாக வெட்டிப் படுகொலை

பருத்தித்துறைத்தொகுதியில் வியாபாரிமூலையில் நடைபெற்றுள்ளது

(யாழ்நிருபர் தில்லைநாதன்)

வீதியில் செனறகுடும்பஸ்தரை இடைமறித்துஅவரது கழுத்தில் கண்ட துண்டமாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4மணியளவில் பருத்தித்துறைத்தொகுதியில் வியாபாரிமூலையில் நடைபெற்றுள்ளது

இச்சம்பவத்தில் அதேயிடத்த கணேசலிங்கம் நடேசலிங்கம் வயது 49 என்பவர் பலியானதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர் வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவரை இடைமறித்து கத்தியினால் கழுத்துப் பகுதியில் பல முறை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள கொலை செய்யப்பட்டவரின் சடலம் மரண விசாரணைக்காக பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது கொலையை மேற்கொண்ட தெரிவிக்கப்படும் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் பருத்தித்துறை பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்