மட்டுநகரில் 42நாள் குழந்தைகிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

– எஸ்.சதீஸ்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள வன்னியாஸ் வீதியில் 42 நாள் பெண் குழந்தை வீட்டுக் கிணத்திலிருந்து செல்வாய்கிழமை  15.09.2020 திகதி மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மரணித்த குழந்தையின் தாயார் குழந்தையை தூங்க வைத்துவிட்டு குழியலறைக்கு சென்று வரும்போது குழந்தையை காணாது தேடியதாகவும், பின்னர் அயலவரிடம் சம்பவத்தை கூறி குழந்தையை தேடியபோது குழந்தை அவர்களது வீட்டுக் கிணத்தில் மரணமான நிலையில் இருந்து மீட்டுள்ளனர்
இச் சம்பவம் செல்வாய்கிழமை  15.09.2020 திகதி மாலை 5.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
கிணத்தில் குழந்தையை வீசியவர் யார் என்பது தொடர்பில் மோப்ப நாய் சகிதம் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.