மட்டக்களப்பில் இரு பிரதேசங்களில் திலீபனின்

நினைவு தினத்தை நினைவு கூர தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ;க்கு இரு நீதிமன்றம் தடை உத்தரவு
கனகராசா சரவணன் —
தியாகதீபம் திலீபனின் நினைவு தினத்தை மட்டக்களப்ப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசங்களில்  தமிழ்; தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தலைமையில் விளக்கேற்றி  நினைவு கூருவதற்கு நாளை செவ்வாய்க்கிழமை 15  தொடக்கம் எதிர்வரும் 21 ம் திகதி வரை நீதிமன்றம் இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்தது இவ் கட்டளையை இன்று திங்கட்கிழமை (14) இரவு 9 மணியளவில்  அவரது வீட்டிற்கு பொலிசார்; சென்று சமர்ப்பித்துள்ளனர்.

திலீபனின் நினைவேந்தல் நாளை (15) நினைவு கூருவதற்கு கொக்கட்டிச்சோலை மாவடிமும்மாரி  தமிழீழ விடுதலைப்புலிகளின் மைதானத்தில் விளக்கேற்றி நினைவு கூர தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தலைமையில் 3 கொண்ட குழுவினர் எற்பாடுகளை செய்திருந்தார்க கிடைக்க பெற்ற புலனாய்வு அறிக்கையின் பிரகாரம்
இவ் நினைவேந்தல் நடவடிக்கையை மேற்கொள்ள 1979 ம் ஆண்டின் 15 ம்  இலக்க குற்றவியல் நடபடிமுறை சட்டக்கோவை பிரிவு 106 91) இன் கீழ்  கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பொ.ப. நளீன் அசோக குணவர்த்தன நாளை காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை இதனை நிறுத்துவதற்கு தடை உத்தரவு ஒன்றை கோரி நீதிமன்றில் அறிக்கை செய்துள்ளார். இதன் பிரகாரம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பொலிசார் கோரிய தடை உத்தரவை பிறப்;பித்து கட்டளையிட்டுள்ளார்.
அதேவேளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தீபனின் நினைவேந்தல் நினைவுகூர மேல்மாடிவீதியில்ள்ள கட்சி காரியாலயத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக புலனாய்வு தகவலுக்கமைய குற்றவியல் நடபடிமுறை சட்டக்கோவை பிரிவு 106 91) இன் கீழ் நாளை 15 ம் திகதி முதல் எதிர்வரும் 21ம் திகதி  இரவு 9 மணிவரை அவர் அவர்சாந்த உறுப்பினர்களால் விக்கேற்றி நினைவு கூர நடவடிக்கை  மேற்கொள்ள இருப்பதாகவும் கொரோனா  தொற்று நோய் காரணங்கள் மற்றும் இதற்கு  எதிரானவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட வாய்பு இருப்பதாக இதற்கு தடை உத்தரவு கோரி
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பி.கே. ஹாட்டியாராச்சி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை செய்துள்ளார் இதன் பிரகாரம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பொலிசார் கோரிய தடை உத்தரவை பிறப்;பித்து கட்டளையிட்டுள்ளார்
இந்த இரு பிரதேச பொலிஸ் நிலைய பொலிசார் இந்த இரு நீதிமன்ற தடை உத்தரவு  உத்தரவு கட்டளையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; வீட்டிற்கு இரவேடு இரவாக கொண்டு சென்று அவரிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.