மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று இன்று (14) திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக இடம்பெற்ற இச் செயலமர்வில் ஊடகவியலாளர்கள் செய்திகளை சேகரிப்பது தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் சட்டசிக்கல்கள் தொடர்பாகவும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் வளவாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையின் உதவிப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.மோசஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.