18479.5 ஏக்கர் வயல் நெற்செய்கைக்கு தீர்மானம்.

18479.5 ஏக்கர் நெற்செய்கைக்கு இந்த ஆண்டு 2020/2021 பெரும்போகத்திற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெரு நீர்ப்பாசனத்திற்கமைய 8686 ஏக்கர்

சிறு நீர்ப்பானத்திற்கமைய 480 ஏக்கர்

மானாவாரி 9313.5 ஏக்கர்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாயிகளால் இப்பிரதேச குளங்கள் மற்றும் மழைநீர் என்பவற்றை எதிர்பார்த்து நெற்செய்கையில் இந்த ஆண்டு ஈடுபடும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், மாவட்ட விவசாய பணிப்பாளர், விதை அத்தாட்சிப்படுத்தும் அதிகாரி, மாவட்ட உரக்கூட்டுத்தாபன பணிப்பாளர் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், வங்கி முகாமையாளர்கள், விவசாய பெரும்பாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.