ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கூடுகின்றது

கட்சியில் தலைமைத்துவ நெருக்கடியைத் தீர்க்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கூடுகின்றது என  கட்சியின் பொதுச் செயலாளர் அகிலா விராஜ் கரியவாசம் தெரிவித்தார்.

கட்சியின்அடுத்த தலைவரை நியமிப்பது தொடர்பான சர்ச்சை இன்று முடிவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் செயற்குழு தலைமை தாங்க உள்ளது என்று கூறினார்.

அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் உறுதிசெய்யப்பட்டவுடன்  தேசிய பட்டியலில்  குறித்தும் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.