போராட்டங்களில் பங்குபற்றாத ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீனின் தரப்பினர்.அரசுக்கு பச்சைக்கொடியா?

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட போராட்டங்களில் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீனின் எம்.பி.க்களோ  அக்கட்சிகள் சார்ந்தவர்களோ பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நடந்த கறுப்பு-சால்வை போராட்டத்தில் இரு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

 கொழும்பில் நடந்த போராட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  சிலர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பகிரங்கமாக பாராட்டியுள்ளனர்.

நேற்றுமுன்தினம் நடாந்த முஸ்லிம்காங்கிரஸின்  உயர் பீடக்கூட்டத்திலும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைசடாத்தவேண்டுமென பல உறுப்பினர்கள் தெரிவித்ததுடன்  தேசியபட்டியல் தராத தரப்புடன் நமக்கென்ன பேச்சு என சஜித்தரப்பை கடுமையாக சாடியதாகவும்  மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் உறுப்பினர்களின் கருத்தினை வைத்துப்பார்க்கும்போது 20வது திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் போல் தென்படுவதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் சுபீட்சத்துக்கு தெரிவித்தார்.