போதைப்பொருள் கடத்தல் இராணுவம் சம்பந்தப் பட்டால் கடும் நடவடிக்கை

smart

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா,  இராணுவவீரர்கள்போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா   தெரிவித்தார்.

திருகோணமலையில் 22 வது பிரிவுக்கு விஜயம் செய்தபோது ராணுவ தளபதி மேற்படி கருத்தை வெளியிட்டார்.கொரனா காலத்தில் கடமையாற்றிய இராணுவவீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வியாழக்கிழமை திருமலைக்கு விஜயம் செய்திருந்தார்.

கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை இராணுவத்தினரை வற்புறுத்த முயற்சித்ததாக செய்திகள் வந்துள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்தார்.