நல்லாட்சி அரசில் நிறுவப்பட்ட மட்டு.ஹோமியோபதி வைத்தியசாலையின் மருந்துத் தட்டுப்பாட்டை நீக்குமாறு கோரி நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்

வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
ரீ.எல்.ஜவ்பர்கான்
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அரசினர் ஹோமியோபதி வைத்தியசாலையின் மருந்துத் தட்டுப்பாடு உட்பட அடிப்படை வசதிகளையும் நீக்குமாறு கோரி  நேற்று காலை வைத்தியசாலைக்கு முன்னால் நோயாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2019ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்கீழ் சுகாதார அமைச்சனால் மாவட்டந்தோறும் நிர்மாணிக்கப்பட்ட ஹோமியோபதி வைத்தியசாலை மட்டக்களப்பிலும் நிர்மாணிக்கபட்டது.
நிர்மாணிக்கபட்டு இரண்டு வருட்ஙகள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை தேவையான மருந்துப் பொருட்கள் வழங்கப்படவில்லை.மட்டுமன்றி வைத்தியசாலைக்குத் தேவையான கட்டிட வசதிகளோ தளர்பாட ஆளணி வசதிகளோ ஏற்படுத்ததரவில்லையென வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அபூபக்கர் முனீர் தெரிவித்hர்.
தூர இடங்களிலிருந்தும் தினமும் 50-60 நோயாளர்கள் சிகச்சைக்காக வருகின்றபோதிலும் தேவையான மருந்து வகைகள் வழங்கபபடவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று காலை சிகிச்சைக்கென வந்த நேர்யாளர்கள் மருந்து வழங்குமாறு கோரி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான மகஜரை ஜனாதிபதி பிரதமர் சுகாதார அமைச்சர் மொவட்ட பாராளுன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காராhகள் தெரிவித்தனர்.