சிறுநீரகத்திலிருந்த பெருமளவிலான கற்கள் சத்திரசிகிச்சைமுலம் அகற்றப்பட்டது.

கல்முனையில் நடந்த வெற்றிகரமான சிகிச்சை
யு எல் எம் றியாஸ் 
எம் எம் ஜெஸ்மின்

கல்முனை அஹ்மத் அலி வைத்தியசாலையில் மிக நீண்டகாலமாக சிறுநீரக உபாதையால் அவதியுற்ற  கண்டி உடதலவின்ன பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரின் சிறுநீரகத்தில் இருந்து பொது சத்திர சிகிச்சை வைத்திய நிபுனர் டாக்டர் ஏ.டபிள்யூ. எம்.சமீம் தலைமையிலான வைத்தியர் குழாமினால் மேற்கொண்ட சத்திர சிகிச்சை மூலம் நோயாளியின் சிறுநீரகத்தில் இருந்து பெரியளவிலான கற்கள் மிக நுட்பமான முறையில் அகற்றப்பட்டது. இதையடுத்து மிகுந்த வலியால் அவதியுற்ற குறித்த நபர் சத்திர சிகிச்சையின் பின்  பூரண குனமடைந்தார்.