காத்தான்குடி சுகாதார அலுவலகத்தினால் மேற் கொண்ட 40 பேருக்கான பி.சி.ஆர்.பரிசோதனை எவருக்கும் கொரோனா இல்லை .

ரி.எல்.ஜவ்பர்கான் 

காத்தான்குடியில் இதுவரை 40 பேருக்கு மேற் கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் படி இவர்;களில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென அறிக்கை கிடைத்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

காத்தான்குடி சுகாதார அலுவலகத்தினால் கொவிட் 19 கொரோனா நோய் தொடர்பான பி.சி.ஆர்.பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் மாதிரிகள் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக 40 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அவைகளை பரிசோதனை செய்யப்பட்டன. இதன் படி இதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

பி.சி.ஆர்.பரிசோனை செய்யும் திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையங்களில் கடமை புரிவோர், பஸ் சாரதிகள் நடாத்துனர்கள் மற்றும் மக்களுடன் வேலை செய்வோர் என பல தரப்பட்டோர்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.