உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன்; தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வௌ;வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் 21 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் நேற்று திங்கட்கிழமை (07) உத்தரவிட்டார்.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர்; ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த 64 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிகப்பட்ட நிலையில் 59 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்படடுள்ளனர்
இதேவேளை இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக வௌ;வேறு வழக்கு இலக்கங்களை கொண்ட ஸாரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் ஆகிய 4 பேர் உட்பட 68 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வௌ;வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட 68 பேரின்; வழக்குகள் நேற்று திங்கட்கிழமை (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பேரும் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் ஏனைய 63 பெரும் வௌ;வேறு மாவட்டத்திலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அழைத்து வரமுடியாத காரணத்தினால் காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் 63 பேரையும்; எதிர்வரும் 21 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்..