ஓட்டமாவடியில் புலமைப்பரிசில் பரீட்சை துரித மீட்டல்செயலமர்வு

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் மாணவர்களின் கல்வி மற்றும் பரீட்சை முடிவுகள் பின் தங்கிய நிலையினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அதிகஷ்டப்பிரதேச பின்தங்கிய பாடசாலைகளின் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை துரித மீட்டல் செயலமர்வு ஓட்டமாவடி காவத்தமுனையிலுள்ள விடுதியில் இன்று நடைபெற்றது.

ஓட்டமாவடி அபூபக்கர் பௌண்டேஷன் மற்றும் கல்குடா கெல்பிங்க விங்க்ஸ் அமைப்பினர் இணைந்து ஒழுங்கமைத்திருந்த இச்செயலமர்வில் கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயம், காவத்தமுனை மில்லத் வித்தியாலயம், தியாவட்டவான் அரபா வித்தியாலயம், பாலைநகர் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயம், கேணிநகர் மதீனா வித்தியாலயம், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம் மற்றும் ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயங்களைச் சேர்ந்த 167 மாணவர்கள் பேர் பங்குபற்றியிருந்தனர்.

இச்செயலமர்வில் வளவாளராக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் கலந்து கொண்டு புலமைப்பரிசில் பரீட்சை துரித மீட்டல் தொடர்பில் விளக்கமளித்தார்.