மட்டக்களப்பில் கோவிலுக்கு சென்று தனிமையில் வீடு திரும்பிய வயோதி பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கலியை அறுத்தவர் கைது

 மட்டுமாறன்
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் கோவிலுக்கு சென்று திரும்பிய வயோதி பெண் ஒருவஐர மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்ற ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (08) கைது செய்துள்ளதுடன் அறுக்கப்பட்ட தங்கச் சங்கிலியும் மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

குறித்த பகுதியைச் சேர்ந்த வயோதிவ பொண் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (06) கொக்கட்டிச்சோலை கோவிலுக்கு தனிமையில் சென்று வழிபட்டுவிட்டு பஸ்வண்டியில் வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து செல்ல முற்பட்போது மோட்டார்சைக்கிளில் ஒருவர் அவரை பின் தொடர்ந்து ஏறுங்கள் வீட்டில் கொண்டு சென்றுவிடுகின்றேன் என்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் மோட்டார்சைக்கிளில் ஏற மறுத்த நிலையில் அவரை கீழே தள்ளிவீழ்திவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக்கோண்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட் நிலையில் பிள்ளையர் ஆலயத்தடியில் பொருத்தப்பட்ட சிசிரி கமராமூலம் குறித்த கொள்ளையரின் மோட்டர்சைக்கிளை அடையாளம்கண்டு கொள்ளையரை இன்று செவ்வாய்க்கிழமை பொலிசார் கைது செய்தனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாமாங்கம் முதலாம் குறக்கு வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் எனவும் இவர் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டர்சைக்கிள் மற்றும் கொள்ளையிட்ட தங்கச்சங்கிலியையும் மீட்டதுடன் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.