50ற்கும் குறைவான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஐ.தே.கட்சியின் 74வது ஆண்டு விழா.

ஐக்கிய தேசிய கட்சியின்  74 வது ஆண்டு விழாக்கள் சிறிக்கோத்தா கட்சி தலைமையகத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜோன் அமரதுங்கா, தயா கமகே, வஜிரா அபேவர்தன, அகிலா விராஜ் காரியவாசம், நவீன் திசநாயக்க, , அர்ஜுனா ரனதுங்க, ருவான் விஜேவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் 50ற்கும் குறைந்த கட்சி உறுப்பினர்களே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.