மட்டக்களப்பு உன்னிச்சை 6ஆம் கட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித அந்தோனியார் ஆலயம்.

மட்டக்களப்பு உன்னிச்சை 6ஆம் கட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித அந்தோனியாரின் ஆலயம் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது

கடந்த அசாதார சூழ்நிலை காலப்பகுதியில் சேதமடைந்த மட்டக்களப்பு உன்னிச்சை 6ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலயம் அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரின் மற்றும் மாவட்ட செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிறிஸ்தவ மத விவகார அமைச்சி மற்றும் உன்னிச்சை பிரதேச பொதுமக்களின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியாரின் ஆலயம் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் அரசாங்க அதிபர் கலாமதி இபத்மராஜா இ முன்னாள் அரசாங்க அதிபர் . .எம் . உதயகுமார் இ மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்  நாடாளுமன்ற சாணக்கியன்  23 ஆம் படை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசுந்தர  231 படை பிரிவு கட்டளை அதிகாரி கேணல் ஜானக பல்லேகும்புர  உதவி பிரதேச செயலாளர் சுதா சதாகரன் ஆகியோர் கலந்து ஆலயத்தினை மக்கள் வழிபாட்டுக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள் இ பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் இதன்போது ஆலய திறப்பு விழாவினைசிறப்பிக்கும் வகையில் புனிதரின் நினைவு சுரூபமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது