பொதுக்கழிவறைக்கு செல்லும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் உட்பட ஆறுபேர் கைது.

0
118

கண்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் இருந்த மாணவர்களும்,  தனியார் வகுப்புகளில் கலந்துகொள்ள நகரத்திற்கு வந்த மாணவர்களும் தங்கள் உடல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பொது கழிப்பறைகளுக்குச் செல்லும் மாணவிகளை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த குழுவொன்றை கண்டி பொலிசார்  கைது செய்ததாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதாத் மாசிங்க தகவல் தெரிவித்தார்..

சந்தேக நபர்களை பொது கழிப்பறைகளுக்கு அருகே சிவில் உடையிலிருந்த அதிகாரிகள் கைது செய்தனர், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு ஆசிரியரும் அடங்குவதாக கண்டி போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியதால், சந்தேக நபர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்து அவர்களை விடுவித்துள்ளது.