தீயைகட்டுப்படுத்த இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையினரும் பணியில்

0
124

கிழக்கு கடற்பரப்பில் எரியும் எண்ணெய்க்கப்பலின்தீயை  கட்டுப்படுத்த இலங்கை கடற்படை தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது.

இதற்கு இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையினரும் துணைபுரிகின்றனர். கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் இந்திகா டி சில்வா கூறுகையில், கப்பலின் என்ஜின் அறையில் ஏற்பட்ட தீ எண்ணெய் இருப்புக்கள் சேமிக்கப்பட்ட பகுதிக்கு இன்னும் பரவவில்லை.

எண்ணெய் இருப்பு அமைந்துள்ள பகுதிக்கு தீ பரவாமல் தடுக்க மேலும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை  பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மூன்று கடற்படைக் கப்பல்கள், இரண்டு வேக படகு கப்பல்கள், இரண்டு இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் மூன்று கப்பல்கள் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

 

இதற்கிடையில், கப்பலின் உட்புறத்தில் தீ பரவினால் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயங்கள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.