மட்டு.மாவட்டத்தில் வழமைக்குத் திரும்பியது பாடசாலை கல்வி நடவடிக்கைகள். வீடியோ

0
106

ஜவ்பர்கான்–மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டததில்
கொரோனா வைரஸ் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.

அதற்கமைய தரம் 6 முதல் 13ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் இன்று முதல் வழமை போன்று காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில்  இடம்பெற்றன.

இதேநேரம்இ முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான மாணவர்களுக்கு செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் கற்றல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதையடுத்துஇ கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்துஇ கட்டம் கட்டமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதேநேரம் நேரங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இதற்கமையஇ தரம் 10-13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 07.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை முன்னெடுக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.