வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்த பெண்ணை  காட்டு யானை தாக்கியதில் படுகாயம்

எஸ்.சபேசன்
மட்டக்களப்பு  வெல்லாவெளி பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட மாலயர்கட்டுக் கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்த பெண்ணை  காட்டு யானை தாக்கியதில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் புதன்கிழமை அதிகாலை 1.30தொக்கம் 3.30க்கு இடையேயான நேரத்துக்குள் மாலயர்கட்டு கிராமத்திற்குள் உட்புகுந்த யானை  அப் பெண்ணை தாக்கிவிட்டு அங்குள்ள 3வீடுகளையும் உடைத்து சேதமாக்கியுள்ளதுடன்  வீட்டினுள் இருந்த நெல்லையும் உண்டுவிட்டு சென்றுள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் இத் தாக்குதலில் மாலயர் கட்டு பிரதேசத்தை சேர்ந்த சி.யோகராணி அவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஆகஸ்ட்17ம் திகதி தொடக்கம் இது வரையில் 9வீடுகள் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமாகியிருப்பதாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவிப்பதுடன் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் இடம்பெற்று வருவதனால் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் யானைகள் கிராமத்துக்குள் உட்புகுகின்ற வேளையில் அதனை கட்டுப்படுத்தி விரட்டுவதற்கு சம்பந்தப்பட்ட எந்த அதிகாரிகளும் இதுவரை  நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே காட்டு யானைகள் கிராமத்துக்குள் உட்புகுவதனைத் தடுக்க அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ ன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்