சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் முருகன் தீர்த்தோற்சவம்

எஸ்.சபேசன்
இலங்கையில் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையில் வராலற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசாமி ஆலயத்தின் வருடார்ந்த உற்சவம் அதாவது கடந்த கடந்த 13 ஆம் திகதி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாகி தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

 
மட்டக்களப்பு நகர் தெற்கே சுமார் 38 கிலோ மீற்றர் தூரத்தில் அழகு செறிந்த மண்டுர் கிராமம் அமைந்துள்ளது. தில்லை மரங்கள் அடர்ந்த காட்டில் அமைதியான சூழலிலே தானாக அடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காக வந்துதித்த ஒளி வீசும் வேலாயுதமாகவும் அதாவது முருகப்பெருமானார் சூரபத்மனை சங்கரித்த வேலாயுதத்திலிருந்து பிறந்த ஒளிப்பிளம்புகளில் ஒன்று உகந்த மலையிலும் இன்னென்று திருக்கோவில் வெள்ளை நாக மரத்திலும் மற்ரையது மண்டூரில் தில்லை மரத்திலும் வேல்களாக உதித்து காட்சி கொடுத்தது என வரலாறுகள்.
 
புரட்டாதி மாதம் (02) இன்று பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ சுவாமி புஸ்பக வாகனத்தில் உள்வீதி,வெளிவீதி ஊடாக வலம் வந்து மட்டக்களப்பு வாவி சங்கமிக்கும் மூங்கிலாற்றில் உள்ள தீர்த்தக்கேணியில்;  புண்ணிய தீர்த்தம் இடம்பெற்றது.
 
சுவாமி தீர்த்தமாடி  மீண்டும் வந்தடைந்து வெளி வீதி வலம் வருகையில் ஆரார்த்தி எடுக்கும் சிறுமியர்கள்,கப்புகனார் மயக்கமுற்று விழ அவர்களை தூக்கிக் கொண்டு வள்ளியம்மன் ஆலயத்தில் வளர்த்தியவுடன் மயக்கம் தெளிவுறும் கண்கொள்ளாக் காட்சி இவ்வாலயத்தில் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. இவ்வற்புதம் இவ்வாலயத்தில் வருடம் தோறும் இடம்பெறுவது குறிப்பிடதக்கதாகும்