விசேட அதிரடிப்படையின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட துஆப் பிரார்த்தனை

0
67

பாறுக் ஷிஹான்
பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF)ஆரம்பிக்கபட்டு 36 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டம்  மஸ்ஜிதுன் நூர் ஜும் ஆ பள்ளிவாசல் பள்ளிவாசல்  ஏற்பாட்டில் நாட்டுக்கும் படை வீரர்களுக்கும் நல்லாசி வேண்டி   விசேட துஆப் பிரார்த்தனை மாலை   இடம்பெற்றது .

இந்நிகழ்வானது மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும் ஆ பள்ளிவாசல் பள்ளிவாசல் தலைவர் எஸ்.ஏ.ஆர்.எம்.எஸ்.எம்.டாக்டர்  மெளலானா தலைமையில் இடம்பெற்றதுடன் மருதமுனை விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பாதிகாரி  எம். எச். அமில மதுரங்க உட்பட அதிரடிப்படை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்  விசேட அதிரடிப்படையினரால் பள்ளிவாசலில்  கடந்த கால யுத்தத்தின போது உயிர் நீத்த விசேட அதிரடிப்படை படை வீரர்களுக்காகவும் விசேட பிராத்தனை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதன்போது மருதமுனை ஜமியதுல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல்களில் சம்மேளனத்தின் செயலாளர் எம்.எல்.எம்.ஜமால்தீன்,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அம்பாரை மாவட்ட அமைப்பாளர் சர்மில் ஜஹான் மற்றும்  பள்ளிவாசல் நிர்வாகத்தினர்கள்,விசேட அதிரடி படையினர் பொது மக்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்.