பிறைந்துரைச்சேனையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.

0
76

முர்சித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை ஹ_தா பள்ளிவாயல் வீதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி விஜயவீர தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.துசிதகுமார தலைமையில் பொலிஸ் பரிசோதகர்களான எம்.பி.எம்.தாஹா, ஜி.ஐ.புஸ்பகுமார, எஸ்.வாசல, ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது பிறைந்துரைச்சேனையை சேர்ந்த 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரிடம் இருந்து 1850 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி விஜயவீர மேலும் தெரிவித்தார்.